×

பர்கூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் கிரானைட் கழிவுகள்

கிருஷ்ணகிரி, அக்.31: பர்கூர் பகுதியில் கிரானைட் திடக்கழிவுகள் சாலையோரம் கொட்டுவதால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், ஜெகதேவி சுற்றுவட்டார பகுதியில் 350 கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களை, இங்கு மெருகூட்டி, விற்பனைக்கு அனுப்புகின்றனர். குறிப்பாக அச்சமங்கலம், சஜ்ஜலப்பள்ளி, ஏ.கொல்லப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சில கிரானைட்  மெருகூட்டும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகள் மட்டுமல்லாமல் திரவ கழிவுகளும் சாலையோரங்கள், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளில் இருந்து இரவு நேரங்களில் கிரானைட் கழிவுகளை சாலையோரங்களிலும், விளை நிலத்தை ஒட்டியும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள கிரானைட் கழிவுகளை அகற்றி கிரானைட் மெருகூட்டும் நிறுவனங்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Burgur ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...