×

இலக்கியம்பட்டியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

தர்மபுரி, அக்.31: இலக்கியம்பட்டி ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலக்கியம்பட்டி ஊராட்சியில், மாரியம்மன் கோயில் தெரு, முனுசாமிசெட்டி தெரு, கணபதி காலனி, கோபால் காலனி, நெல்லி நகர், பிடமனேரி உள்ளிட்ட 27 குடியிருப்பு பகுதிகளில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளி கட்டிடங்கள், காய்கறி மற்றும் மளிகை கடைகள், சிறுதொழில் வளாகங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையால், டெங்கு கொசுக்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இலக்கியம்பட்டி ஊராட்சி செயலாளர் சரவணன் தலைமையில், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர், இலக்கியம்பட்டி ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தெருக்கள், வீடுகள், பள்ளி கட்டிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க பிளீச்சிங் பவுடர் தெளித்தும், அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடித்தும் வருகின்றனர்.

Tags : literature bar ,
× RELATED இலக்கியம்பட்டியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்