×

தொட்டபெட்டா வனப்பகுதியில்வளரும் சோலை மரங்கள் பாதுகாக்க சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

ஊட்டி, அக். 31: நீலகிரிக்கே உரித்தான சோலை மரங்கள் தொட்டபெட்டா வனப்பகுதியில் வளர துவங்கியுள்ளதால் அதனை பாதுகாக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட ஊட்டி அருகில் உள்ள தொட்டபெட்டா சுற்று வட்டார வனப்பகுதிகளில் யூக்கலிப்டஸ், பைன் போன்ற அந்நிய தாவரங்கள் அடர்ந்துள்ள காடுகளுக்கு நடுவே சோலை மரங்கள் வளர துவங்கியுள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர் வசந்த் பாஸ்கோ கூறுகையில், நீலகிரியில் காணப்படும் சோலை காடுகளில் விக்கி, நாவல், சிறு நாவல், தவிட்டு உள்ளிட்ட 95 மர வகைகள் உள்ளன. அதேபோல் போல் சோலை குறிஞ்சி, ஆர்க்கிட், ேராடாரென்ட்ரான் உள்ளிட்ட 400க்கும் அதிகமான செடி வகைகள் உள்ளன.

தற்போது இவற்றின் அழிவுக்கு காரணமாக இருப்பது களை மரங்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் இவற்றை எதிர்கொண்டு மீண்டும் வளர சோலை மரங்கள் தகவமைத்து கொண்டன. இது ஆரோக்கியமான விஷயம். சுற்றுசூலை பாதுகாத்து இருக்கும் மழைக்காடுகளை பாதுகாத்தால்போதும் எந்த இடர்களையும் தாங்கி வளரும், என்றார். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தொட்டபெட்டா ஸ்னோடன் வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்நிய மரங்களின் மத்தியில் தற்போது சோலை மரங்களும், செடிகளும் துளிர்த்து வருகின்றன. இது இந்த காடுகளுக்கு நல்ல அறிகுறியாக உள்ளது, என்றனர்.

Tags : activists ,oasis ,forest ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...