×

மழையால் தாவரவியல் பூங்கா புல் மைதானம் பாதிப்பு

ஊட்டி,  அக். 31:  தொடர் மழையின் காரணமாக ஊட்டி தாவரவியல்  பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனை அறியாமல் மைதானத்திற்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் சில இடங்களில்  சேற்றில் சிக்கிக் கொள்கின்றனர். சிலர் புல் மைதானம் ஈரப்பதத்துடன்  உள்ளது அறியாமல், அமர்ந்து விடுகின்றனர். பின், ஆடைகளில் சேற்றை கண்டு  அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக, பெர்னஸ் புல் மைதானம் சேறும் சகதியுமாக  மாறியதால், அங்கிரந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. மேலும், புல்  மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதால், புல் மைதானமும்  பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பெர்னஸ் மற்றும் சிறிய புல்  மைதானத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Botanical Ground Ground ,Rain ,
× RELATED இரணியலில் 32 மி.மீ மழை பதிவு