×

கோவை-மேட்டுப்பாளையம் இடையே 8 புதிய பெட்டிகளுடன் மெமு ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம்,அக்.31:  மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயக்கப்படக்கூடிய பயணிகள் ரயில் இன்று முதல் மெமு (MEMU) ரயில் மூலம் இயக்கப்பட உள்ளது.நவீன தொழில்நுட்பத்தில் உருவான இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டியில் 90 பேர் வரை அமரலாம் 20 முதல் 25 பேர் நின்று கொண்டு பயணிக்கக்கூடிய அளவில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் முதல் பெட்டியில் இருந்து கடைசி வரை உள் பகுதியில் பயணிகள் நடமாடும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய நவீன மெமு ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு கோவையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்த மெமு ரயில் மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து இன்று காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இந்த ரயிலில் பயணிக்க உள்ளது. தொடர்ந்து இந்த ரயிலை பயன்படுத்த சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags : MEMU ,Coimbatore-Mettupalayam ,
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்