ஊட்டி ஏரியில் படகு சவாரி ரத்து

ஊட்டி, அக்.31:  மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் ஊட்டி ஏரியில் நேற்று பாதுகாப்பு கருதி படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகலுக்கு மேல் துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனினும், நேற்று மாலை வரை கன மழை பெய்யவில்லை. மிதமான மழை பெய்து பெருகிறது. இதனால், ஒரு சில இடங்களில் மட்டுமே பாதிப்புகள் ஏற்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

மாவட்டம் முழுவதும் மழை பெய்த போதிலும், ஊட்டியில் மட்டும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் வெளியில் வர முடியாத நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது.  தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக ஊட்டி ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. பைக்காரா பகுதியில் மழை சற்று குறைந்து காணப்பட்டதால், பைக்காரா அணையில் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டன. தொடர் மழையால் கடும் குளிர் வாட்டும் நிலையில், அறைகளை விட்டு வெளியே வரமுடியாமல்  சுற்றுலா பயணிகள் முடங்கியுள்ளனர்.

Related Stories:

>