×

மாநகராட்சி ஊழியர்களுக்கு தனி செயலி

கோவை, அக். 31: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர், சுகாதாரம், சாக்கடை போன்ற பிரச்சனைகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது அதனை உடனடியாக மாநகராட்சி கமிஷனருக்கு தெரியப்படுத்தும் விதமாக தனி செயலி உருவாக்கப்பட்டு  அதனை மாநகராட்சி ஊழியர்கள் உபயோகித்து வருகின்றனர் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளார்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் தண்ணீர் வருவதில் தாமதம், குப்பைகள் அகற்றப்படவில்லை, சாக்கடை கழிவுகள் அகற்றாமல் இருப்பது, கொசுக்கள் தொல்லை, தெருவிளக்குகள் எரிவதில்லை, சாலை சீரமைப்பு, சுகாதாரம் தொடர்பான என பல பிரச்சனைகளை மாநகராட்சி அதிகாரிகள் எளிதில் தெரிந்துகொள்ளவும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவும் புதிய செயலி உருவாக்கப்பட்டு அதை தற்போது மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநகராட்சி பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஆய்வுக்கு செல்லும்போது அந்த பிரச்சனைகளை இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும். இதில் மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர் என மாநகராட்சியின் அனைத்து துறை சார்ந்தவர்களும் பார்க்க முடியும். இந்த செயலிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்க முடியும். முதல் கட்டமாக மாநகராட்சி ஊழியர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தும் விதமாக வடிவமைக்க உள்ளோம்’’ என்றார்.

Tags : Corporation ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...