×

ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் தந்தால் சன்மானம்

கோவை, அக். 31:  ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் தந்தால் தகவல் தருபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சன்மானம் தரப்படும் என யங் இந்தியா பவுண்டேசன் அமைப்பினர் தெரிவித்தனர்.இது குறித்து யங் இந்தியா பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் ஆர்.சி.எம். விஷ்னுபிரபு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் நடைபெற்ற ஆழ்துளை கிணறு சம்பவம் இறுதியானதாக இருக்க வேண்டும். இந்தியாவில் இனி ஆழ்துளை கிணறுகள் விபத்து ஏற்படாத வண்ணம் மாற்றிட வேண்டும். தோட்டத்தில், விவசாய நிலங்களில் போன்ற எந்த இடத்திலும் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் தந்தால் தகவல் தருபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சன்மானம் தரப்படும்.
அதே சமயம் அந்த ஆழ்துளை கின்றுகளும் மூடப்படும். ஒருவேளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்படுமா? என பார்க்கப்படும் இல்லையென்றால் மூடப்படும். இதை நாங்கள் இலவசமாக இந்தியா முழுவதும் செயல்படுத்த போகிறோம். அடுத்து நவம்பர் 4ம் தேதி மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக அனுமதி கோரி மனு அளிக்கவுள்ளோம். தகவல் தருபவர்கள் 9150226634 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். உடன் பொருளாளர் கார்த்திகேயன், தலைவர் ஷியாம் மற்றும் நிர்வாகிகள் சுஜய், மனிதநேயன், ஹரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்