×

அதிக வட்டி தருவதாக ஏமாற்றிய மோசடி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்

கோவை,அக்.31:  கோவையில் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பணத்தை வாங்கி  மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கோவை திருச்சி சாலை பார்க் டவுன் பகுதியில் செயல்பட்டு வந்த புரோ இந்தியா டிரேடிங் என்ற நிதிநிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி  பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பணத்தை பெற்றுள்ளது. குறிப்பிட்ட காலம் முடிந்தும் டெபாசிட் பணம் மற்றும் வட்டியை திரும்ப தரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த மணிவண்ணன், முருகவேல், முருகேசன்,செந்தில்வேல்,சேட்டு ஆகியோர் மீது கடந்த 2013-ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து இதுவரை புகார் தராமல் உள்ளவர்கள் யாரேனும் இருந்தால், முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளரிடம் வரும் நவம்பர் 8-ம் தேதிக்குள் புகார் கொடுக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

Tags : company ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...