×

மாநில அளவிலான செஸ் போட்டி

ஈரோடு, அக். 31:  ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி நேற்று நடந்தது. இதில், 768 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கான பாரதியார், குடியரசு தின மாநில அளவிலான செஸ் போட்டி ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணித்திட்ட இணை இயக்குநர் வாசு முன்னிலை வகித்தார். கலெக்டர் கதிரவன் போட்டியினை துவக்கி வைத்தார். 11, 14, 17, 19 வயது என நான்கு பிரிவுகளாக மாணவிகளுக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் 7 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 32 மாவட்டங்களை சேர்ந்த 384 மாணவர்கள், 384 மாணவிகள் என 768 பேர் பங்கேற்று விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக விளையாடிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக விளையாடிய 24 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : chess competition ,
× RELATED மாநில சதுரங்க போட்டிக்கு கோவில்பட்டி ஜோசப் பள்ளி மாணவர் தேர்வு