×

சென்னிமலையில் நிலையற்ற மின்சாரம்

சென்னிமலை, அக்.31:  சென்னிமலை நகர் பகுதி முழுவதும் உள்ள வீடுகளில் நிலையற்ற மின்சாரம் பாய்வதால் யுபிஎஸ் பயன்படுத்துபவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னிமலை பகுதிகளில் கடந்த 20 நாட்களாக வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம் நள்ளிரவு 1 மணியில் இருந்து தொடர்ந்து 240 வோல்ட் அளவை தாண்டி 269 முதல் 270 வோல்ட் வரை வந்துகொண்டிருக்கிறது. இதனால்,  நள்ளிரவில் மின்சாரத்தில்தான் மின்விசிறி ஓடுகிறதா? மின்விளக்கு எரிகிறதா? அல்லது யுபிஎஸ் பயன்படுகிறதா என யாரும் கவனிப்பதில்லை. வீட்டில் உபயோகப்படுத்தும் யுபிஎஸ்.சில் 240 வோல்ட் மேல் வந்தால் தானாக ஓவர் லோடு ஆகி மின்சாரத்தில் இருந்து மாறி பேட்டரியில் இயங்க ஆரம்பித்துவிடும். இது காலை 4 முதல் 5 மணி வரை நடக்கிறது.

பின்னர், மின் அளவு குறைந்தவுடன் மின்சாரம்  செயல்பாட்டுக்கு வரும். அப்படி வந்தவுடன் 4 முதல் 5 மணி நேரம் பேட்டரியில் இயங்கியதால் மீண்டும் பேட்டரியை நிரப்புவதற்காக யுபிஎஸ் சார்ஜ் மோடுக்கு செல்லும். அவ்வாறு தினமும் நடப்பதால் நாம் பயன்படுத்தும் மின் அளவு அதிகமாகும். இதனால், மின் கட்டணமும் அதிகமாகும். கடந்த 2018ல் இதேநிலை இருந்தபோது தொடர்ந்து  புகார் செய்ததன்பேரில் அவை சரி செய்யப்பட்டது.தற்போது மீண்டும் நிலையற்ற மின்சாரம் பாய்வதால் இதை தடுத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chennimalai ,
× RELATED திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு...