×

பெருந்துறை பகுதி மூன்று ஒன்றியமாக செயல்படும்

பெருந்துறை, அக்.31: தமிழ்நாடு பாஜ கட்சி இதுவரை 51 அமைப்பு மாவட்டங்களாக இருந்ததை மாற்றி 60 அமைப்பு மாவட்டங்களாக செயல்படும் என மாநில தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 40 முதல் 60க்குள் உள்ள வாக்குச் சாவடிகள் உள்ளடக்கியவை ஒரு தனி ஒன்றியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் ஒன்றியமாக, பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 38 வாக்குச்சாவடி உள்ளதை பெருந்துறை நகர் மண்டலம் எனவும். சுள்ளிப்பாளையம், துடுப்பதி, சீனாபுரம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், பொன்முடி, மூங்கில்பாளையம், கம்புளியம்பட்டி, விஜயபுரி, மேட்டுப்புதூர், கராண்டிபாளையம், பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, போலநாய்க்கன்பாளையம், பாப்பம்பாளையம், வெட்டையங்கிணறு, மடத்துப்பாளையம், தோரணவாவி உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகளில் உள்ள 51 வாக்குச்சாவடி பெருந்துறை தெற்கு ஒன்றியமாகவும் செயல்படும்.

அதேபோல், திருவாட்சி, கந்தாம்பாளையம், பெரியவிளாமலை, முள்ளம்பட்டி, கல்லாகுளம், செல்லப்பம்பாளையம், திங்களுர், கருக்குப்பாளையம், நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய கிராம ஊராட்சிகள் மற்றும் பள்ளபாளையம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளும் உள்ள 56 வாக்குச்சாவடி கொண்டது. இது பெருந்துறை வடக்கு ஒன்றியமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளை கமிட்டித் தலைவர்கள் தேர்தல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செப்.2ம் வாரத்தில் கிளைத் தலைவர்களின் ஏகமனதோடு மூன்று ஒன்றியங்களிலும் முறையாக ஒன்றியத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Peruvian ,region ,union ,
× RELATED ஓய்வூதிய தொகையில் செலவுக்கு பணம்...