×

வண்டலூர் - செங்கல்பட்டு வரை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

கூடுவாஞ்சேரி, அக்.31: கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, வண்டலூர் - செங்கல்பட்டு வரையிலான, ஜி.எஸ்.டி சாலையில், தூய்மைப்படுத்தும் பணிகள் தீரமாக நடந்து வருகிறது. கடந்த 2015 - 2016ம் ஆண்டு பெய்த கன மழையின்போது 15க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர், ஓட்டேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காட்டாங்கொளத்தூர், சிங்கபெருமாள்கோயில், செங்கல்பட்டு வரை உள்ள ஜிஎஸ்டி சாலையின் சென்டர் மீடியனை மழை வெள்ளம் அடித்து சென்றது. மேலும், சாலையின் இருபுறமும் குப்பை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி மலைபோல் காட்சியளித்தது. ஆனால் இதுவரை மேற்படி சாலையோரத்தில் உள்ள குப்பை கழிவுகளை சரிவர அகற்றாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்பட்டனர். இதுதொடர்பாக கலெக்டர் பொன்னையாவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையொட்டி, தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கால்வாய்களை தூர்வாரியும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தினார்.கடந்த 22ம் தேதி, வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் உள்ள குப்பை கழிவுகளை ஆய்வு செய்த கலெக்டர், சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் அனைவரும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கால்வாய்களை தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.இந்நிலையில், கலெக்டரின் உத்தரவு எதிரெலியாக, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் ரவி ஆகியோர் தலைமையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றி தூய்மைபடுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மழைநீர் கால்வாய்களில் தூர் வாரும் பணியும் மும்முரமாக நடக்கிறது. இதனை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சாந்தகுமார், உதவி செயற்பொறியாளர் மனோகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags : Cleaning up ,Vandalur - Chengalpattu ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...