×

லாரி விபத்தில் கணவன் உயிரிழப்பு மனைவிக்கு 41 லட்சம் இழப்பீடு: வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, அக். 31: லாரி விபத்தில் உயிரிழந்த கணவனின் கர்ப்பிணி மனைவிக்கு 41 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மருதலம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்,  கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். பொன்னேரி பிரதான சாலை லாலாபேட்டை செக் போஸ்ட் அருகே சென்ற போது, கட்டுப்பாடில்லாமல் எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில், படுகாயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், கணவனின் இறப்பிற்கு ரூ.85 லட்சம்  இழப்பீடு கோரி கர்ப்பிணி மனைவி சபிதா சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி, எஸ். உமா மகேஸ்வரி முன்பு  விசாரணைக்கு  வந்தது. அப்போது, கட்டுப்பாடு இல்லாமலும், பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அஜாக்கிரதையாக லாரியை டிரைவர் ஓட்டி உள்ளார். இதன் காரணமாக, மனுதாரரின் கணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி உள்ளது. இதில், மனுதாரரின் கணவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவர் இறக்கும் போது மனுதாரர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். லாரி தான் விபத்திற்கு காரணம் என தெரிகிறது. எனவே மனுதாரருக்கு, ரூ.41 லட்சம் இழப்பீடாக, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Tags : truck accident ,Vehicle Accident Tribunal ,
× RELATED தூய்மை பணியாளர் விபத்து இழப்பீடு...