×

திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நிலவேம்பு கசாயம்

ஊத்துக்கோட்டை, அக்.31:  மழைகாலம் தொடங்கி விட்டதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் வருகிறது. இதை தடுக்க  பெரியபாளையம் அருகே எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கன்னிகைப்பேர், வெங்கல், தாமரைப்பாக்கம், பூச்சிஅத்திப்பேடு ஆகிய ஊராட்சிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார்.

மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தேவேந்திரன், முரளி, ஒன்றிய நிர்வாகிகள் ஜி.பாஸ்கர், முனுசாமி, முனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள்  வெங்கடாசலம் , நாகலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி. வேணு பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

Tags : Thiruvallur South Union Territory ,
× RELATED டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு...