×

திருவாலங்காடு ஒன்றியத்தில் எம்பி, எம்எல்ஏ குறைகேட்பு

திருத்தணி, அக். 31: திருவள்ளூர் எம்.பி. டாக்டர் கே. ஜெயகுமார், வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது பல்வேறு பிரச்சனைகளான குடிநீர், சாலை சீர்செய்தல்,  போக்குவரத்து வசதி, முதியோர் உதவி தொகை, மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குவத உள்பட  பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்  வழங்கினர்.  இதைப் பெற்றுக் கொண்டு  அதிகாரிகளிடம் அதற்கான தகுந்த நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், திமுக ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ச.மகாலிங்கம், காங்கிரஸ் நிர்வாகிகள் டி.முகுந்தன், புகழேத்தி, வி.ஆர்.ரமேஷ்,  ஏகாட்டூர் ஆனந்தன், சதாபாஸ்கரன், எம்.கே.மணவாளன், வக்கீல்கள் இமாலய அருண்பிரசாத், கே.ஜி. புருஷோத்தமன், வி.இ.ஜான், ஆ.திவாகர், ஒய்.அஸ்வின்குமார், பொன்ராஜ், பிரவீன், வரதராஜன், இளங்கோவன், சம்பத், மோகன்ராஜ், பெஞ்சமின், திமுக நிர்வாகிகள் களாம்பாக்கம் பன்னீர் செல்வம், ஆர்.ராஜா,  சி.ஜெயபாரதி, தினகரன், ஜீவன், சாந்திபன்னீர்செல்வம்,  ஜெயராம நாயுடு, சாந்திஎமரோஸ், லோகநாதன், பஞ்சாட்சரம், காஞ்சிப்பாடி சரவணன்,  யுவராஜ், நந்தகுமார், ஹரிபாபு, அப்துல்ரஹீம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பி.டி.ஓக்கள் ராஜேஸ்வரி, காந்திமதிநாதன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : MB ,MLA ,Thiruvalangadu Union ,
× RELATED பென்னாகரத்தில் முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் நினைவுநாள் அனுசரிப்பு