×

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியை சூழ்ந்த மழைநீர்: மாணவர்கள் அவதி

கும்மிடிப்பூண்டி, அக். 31: கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் ஊராட்சியில்  அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்தப் பள்ளியின் அருகே சுமார் அரை அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது.

இதனால் மாணவ - மாணவிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.  அத்தோடு அந்த பள்ளியின் சமையல் அறை ஒட்டி ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் சில மாதங்களாக இருந்து வருகிறது. இதனை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் மூட வேண்டுமெனவும் பள்ளியின் அருகே தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் எனவும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : state school ,Kummidipoondi ,
× RELATED மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் புகுந்தது: வியாபாரிகள் அவதி