நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை

சென்னை: தமிழக அரசின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சரோஜா, பென்ஜமின், நிலோபர் கபீல், சேவூர் ராமச்சந்திரன், வளர்மதி, நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் டி.ஆர்.பாலு எம்பி, ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியம், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், கே.கே.நகர் தனசேகரன், காஜாமொய்தீன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, துணை தலைவர் தாமோதரன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன், தமாகா சார்பில் ஞானதேசிகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Thevar ,Nandanam ,
× RELATED மீண்டும் ஒரு மரியாதை