×

ரயில் நிலையம் அருகே மரம் முறிந்து விழுந்ததால் பயணிகள் அவதி

திண்டிவனம், அக். 31:  திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் பயணிகள் அவதியடைந்து
வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து  வருகிறது. நேற்று திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை  பெய்தது. இதனால் ரயில்நிலைய வளாகத்தில் உள்ள மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்தது. ரயில் நிலையம் அருகேயுள்ள விநாயகர் கோயில் பின்புறம் செல்லும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால், ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் புது மசூதி தெருவழியாக சுற்றி செல்கின்றனர். எனவே சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரத்தை உடனடியக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,railway station ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!