×

ஆபத்தான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

உளுந்தூர்பேட்டை,  அக். 31: உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் சாலை  ஓரத்தில் டோல்கேட் கட்டணம் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த  இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பெரிய அளவிலான பள்ளம் உள்ளது. இந்த  பள்ளத்தின் வழியாக சாலையில் இருந்து வழிந்தோடும் மழைநீர் சென்று தற்போது  பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு ஆபத்தான இடமாக மாறி உள்ளது.

இதனால் இந்த வழியாக  செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வெளியூரில் இருந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலமுறை இந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.  மேலும் தற்போது மழை காலம் என்பதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் இந்த இடத்தை  அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்துகள்  ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சாலையின் ஓரம் உள்ள ஆபத்தான  பள்ளத்தை உடனடியாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன  ஓட்டிகள் கோரிக்கை
வைத்துள்ளனர்.

Tags : Motorists ,danger crashes ,
× RELATED அருப்புக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டுனர்கள் அவதி