ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம், அக். 31: விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் பாலாஜி நகர், திருக்குறிப்பு தொண்டர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதனையொட்டி கடந்த 29ம் தேதி மங்களஇசையுடன் திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முதல்கால வேள்வி பூஜையும், கருவறை மற்றும் பரிவார சிலைகளுக்கு கோபுரகலசம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று காலை கோயில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோயில் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பன்னீர்செல்வம், தட்சிணாமூர்த்தி, பாலசுப்ரமணியன், வீரபத்திரன், சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>