×

பண்ருட்டியில் பரபரப்பு அரசு பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்

பண்ருட்டி, அக். 31: சென்னையிலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் செல்வதற்காக நேற்று பண்ருட்டி பேருந்து நிலையம் வந்தது. டிரைவர் சிவா இந்த பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பேருந்தை எடுப்பதற்கு முயன்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்தை சரியாக ஓட்ட முடியாமல் டிரைவர் திணறினார். இதனை கண்ட பயணிகள் கூச்சலிட்டு அலறினர். பின்னர் பேருந்தைவிட்டு இறங்கி ஓடினர். அப்போது புறகாவல்நிலையத்தில் பணியில் இருந்த காவலர் சிவசங்கரன் வந்து பேருந்தை நிறுத்தி டிரைவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதனையடுத்து பாதி வழியில் தவித்த பயணிகளை மாற்று பேருந்து மூலம் சிதம்பரம் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Panruti ,
× RELATED ரயில் மோதி அரசு பஸ் டிரைவர் பலி