×

டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

கடலூர், அக். 31: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆலோசனையின்பேரில் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூரில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் டெங்கு விழிப்புணர்வு சுவரொட்டிகள் மக்களின் பார்வைக்கு படும்படி பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் பண்ருட்டி சண்முகம் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணா ரெசிடென்சி ரோட்டரி பட்டேல், ஓட்டல் தேவி முருகன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் மற்றும் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன், யாத்ரா டூர் ராசன், பார்வதி ஆயில் மில் சண்முகம், பவன்டோ சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் நகரில் அனைத்து பிரதான கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு பிரசார போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன், கடலூர் முதுநகர் நெல்லை ஹரிகிருஷ்ணன், பிரகாஷ், வீனஸ் ஞானசேகரன், விக்னேஸ்வரன், பண்ருட்டி தொகுதி செயலாளர் சிவகுரு, பாலாஜி மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். பான்பரி மார்க்கெட் மோகன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்