×

முத்துப்பேட்டை 18வது வார்டில் தேங்கி கிடந்த குப்பை அதிரடியாக அகற்றம்

முத்துப்பேட்டை, அக்.31: முத்துப்பேட்டை பேரூராட்சியின் 18வது வார்டு பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் 18வது வார்டு பகுதியை சேர்ந்த ரயில்வே எதிர்புறம் சாலை, பழைய மின்சார நிலையம் சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதேபோல் ஏராளமான காலனி வீடுகளும் உள்ளது. இங்கு இப்பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி நிர்வாகம் இதுநாள்வரை செய்து கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதி முழுவதும் சாலைகள் படுமோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் படுங்குழியாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் முறையான வடிகால் வசதியும் கிடையாது. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கி மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் தெருவிளக்கு வசதிகளும் இந்த சாலைகளில் இல்லாததால் தற்பொழுது இப்பகுதிகள் முழுவதும் இரவில் இருண்டு கிடக்கிறது. குப்பைகளையும் பேரூராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்றததால் ரயில்வே நிலையம் எதிர்புறம் மற்றும் ஆங்கங்கே அப்பகுதியில் மலைபோல் குவிந்து கிடந்தது. இப்படி பல பிரச்னைகள் இருந்ததை சுட்டிக்காட்டி நேற்று (30ம் தேதி) தினகரனில் படங்களுடன் செய்தி வெளியானது. இதனையடுத்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக களமிறங்கி அப்பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை அதிரடியாக அகற்றியது. மேலும் சுட்டிக்காட்டப்பட்ட மற்ற பணிகளையும் செய்ய உதவிட்டப்படுள்ளது. அதனால் அந்த பணிகளும் விரைந்து நடக்க இருக்கிறது.
இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : Muttupette 18th Ward ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்