மன்னார்குடி, அக் 31: தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜின் மூத்த சகோதரரும், மன் னார்குடி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்ஜி குமாரின் மாமனாருமான கனகசபை (74) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15ம் தேதி இயற்கை எய்தினார். கனகசபையின் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மறைந்த கனகசபையின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ் ச்சி பெருகவாழ்ந்தான் அருகே அணையடி கிராமத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் அதிமுக மாநில கொள்கைப்பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன் பங்கேற்று மறைந்த கனகசபையின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மாலையணிவித்து மரியாதை செய்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் இரா. காமராஜ், வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் எம்பி டாக்டர் கோபால், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்ஜி குமார், கனகசபையின் சகோதரர்கள் ஓய்வு பெற்ற எஸ்ஐ இரா. நடனசிகாமணி, இரா. கருணாநிதி, மாவட்ட ஜெ பேரவை செய லாளர் பொன்வாசுகிராம், மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய ஜெ பேரவை துணை செயலாளர் வேட்டைத்திடல் சத்திய மூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் மூவை வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் நெடுவை கலைவாணன், எளவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆர்கே பிரபாகரன் மற்றும் அனைத்து ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகி கள், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.