×

மன்னார்குடி பகுதிகளில் விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

மன்னார்குடி, அக்.31: மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில வாரங்களுக்கு முன் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கப் பெறவில்லை என தொடர் கோரிக்கை வந்தது.இதையடுத்து சென்னையில் உள்ள அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் தலைமை அலுவலகத் துக்கு நேரில் சென்று பாதிக்கப் பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி உடனடியாக காப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தேன்.
தொடர் முயற்சிகளுக்கு பின்னும் ஒரு சில பகுதிகளுக்கு இன்சூரன்ஸ் வழங் கப் படாததால் நேற்று மீண்டும் சென்னை இன்சூரன்ஸ் தலைமை அலுவலக த்திற்கு நேரில் சென்று மண்டல மேலாளரை சந்தித்தேன். அப்பொழுது கடந்த வெள்ளி அன்று தான் அரசிடமிருந்து புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெற்றது எனவும், மேலும் அரசு வழங்கியுள்ள கணக்குகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கள அதிகாரிகள் எடுத்த புள்ளி விவரங்களுக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து களத்தில் மாதிரிகள் எடுக்கப்படாமல் அலுவலகத்தில் இருந்தபடியே கணக்குகள் எடுக்கப்படுவதால்தான் இதுபோன்ற சில தவறுகள் நடை பெறுகின்றன எனவும், விடுபட்ட பகுதிகளுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினேன்.அக்டோபர் 31 (இன்று) டெல்லியில் மத்திய விவசாய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் உடனான கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் இன்சூரன்ஸ் தொகை விடுபட்டது குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டு விரைவில் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படும் என அதிகாரிகள் உறுதி அளித்திருக்கிறார்கள். எனவே அதிகாரிகள் அளித்துள்ள உறுதிபடி விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : DMK MLA ,areas ,Mannargudi ,
× RELATED திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்