×

வேளாண் உதவி இயக்குநர் எச்சரிக்கை குருபெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 2ம் கட்ட லட்சார்ச்சனை

வலங்கைமான், அக்.31: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருக்கோயிலில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவிற்கு பிறகு இண்டாவது கட்ட லட்சார்சனை விழா இன்று துவங்கி நவம்பர் 7ம்தேதி தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் சோழநாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில், காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 ஸ்தலங்களில் 98வது ஸ்தலமாகவும், நவகிரகங்களில் குருபரிகாரஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆண்டு குருபகவான் கடந்த 29ம் தேதி செவ்வாய் கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். முன்னதாக குருக்கோயிலில் குருபெயர்ச்சிக்கு முன் முதல் கட்ட லட்சார்சனை விழா முடிவுற்ற நிலையில், குருப்பெயர்சிக்கு பின் இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா இன்று (31ம் தேதி) துவங்கி வரும் நவம்பர் 7ம்தேதி வரை நடைபெறுகிறது.

காலை 9 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும் பிற்பகல் மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறுகிறது.ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனையில் பங்கு பெற ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லட்சார்ச்சனையில் பங்கு பெறும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த இரண்டு கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, லக்கனம் ஆகிய முழு விபரங்களுடன் தொகையை பணவிடை, வரைவோலை, எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைத்து பிரசாதம் பெற்று கொள்ளலாம். காசோலைகள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. டிமாண்ட் டிராப்ட் உதவி ஆணையர், செயல்அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றதக்க வகையிலோ அல்லது திருவாரூர் மாவட்ட ஆலங்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில், ஆலங்குடி 612 801, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பவும். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையரும் ஆலய செயல் அலுவலரும், தக்காருமான தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Assistant Director ,Agriculture Alarm Kurupairi Festival ,
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்