×

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

மன்னார்குடி, அக். 31:கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் கூறினார். மன்னார்குடி அடுத்த கோட்டூர் வட்டாரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா, டிஏபி மற்றும் பொ ட்டாசியம் போன்ற அத்தியாவசிய உர இருப்புகள் குறித்து ஆய்வு செய்யப் பட்டது. இதுகுறித்து கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் கூறுகையில், கோட்டூர் வட்டாரத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள யூரியா, டிஏபி மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உரங்கள் குறித்து 3 தினங்கள் தினங்களில் ஆய்வு செய்யப் பட்டது.

இந்த ஆய்வின் போது நிலையத்தில் உள்ள உர இருப்புகள் அதற்கான பதிவேடுகள் மற்றும் விற்பனை முனை கருவியில் உள்ள உர இருப்புகளுடன் சரி பார்க்கப் பட்டது. மேலும், அனைத்து உர விற்பனை நிலையங்களிலும், உர இருப்பு மற்றும் விலை விபரம் தகவல் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. உரங் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தால் உர கட்டுப் பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விற்பனை முனை கருவி வாயிலாகவே விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தற்போது நடைபெற்று வரும் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் பிரியங்கா, துணை வேளாண்மை அலுவலர் சண்முகசுந்தரம் ஆகி யோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...