×

இயற்கை முறையில் தோட்ட பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

மன்னார்குடி, அக்.31: மன்னார்குடி அருகே ராமாபுரம் மற்றும் வாஞ்சியூர் கிராமங்களில் தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை இணைந்து நடவு வயல் வரப்புகளில் வரப்பு பயிராக வெண்டை நடவை மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் துவக்கி வைத்து விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தினேஷ்பாபு, பாலசுந்தரம், விஜயகுமார் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். இதுகுறித்து மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் கூறுகையில், சுற்றுச்சுழல் சார்ந்த தொழிற்நுட்பம் (இ கலாஜிக்கல் இன்ஜினியரிங் ) மூலம் விவசாயிகள் தங்களின் வயல்களின் வரப்புகளில் காய்கறிகள், மலர்கள் மற்றும் பயறு வகை செடிகள் பயிற்றுவிக்கப்படும் போது அவைகள் வளர்ந்து நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும். அதனால் வயல்களில் பூச்சிகளின் தாக்கத்தை கட்டு படுத்தலாம். ஒரு வயலில் இருந்து அருகில் உள்ள வேறு வயல்களுக்கு பூச்சிகள் பரவுவதையும் கட்டுப் படுத்தலாம்.

இதன் முலம் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளின் ரசாயன மருந்துகள் பயன்பாடு பெருமளவு குறையும். இயற்கையான முறையிலே பூச்சிகளை கட்டுப் படுத்துவதால் விவசாயிகளுக்கு செலவினங்கள் கணிசமான அளவு குறையும். மேலும் வரப்புகளில் மலர்கள் மற்றும் பயறு வகை செடிகள் வளர்ப்பதால் அதன் மூலமும் விவசாயிகளுக்கு செலவில்லாத கூடுதல் வருமானம் கிடைக்கும் என கூறினார். நடவு வயல்களில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வகையிலும் நன்மை செய்யும் பூச்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த வரப்பு பயிர் பொறி திட்டம் விவசாயிகளிடம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து விவசாயிகளும்அவர்களது நடவு வயல் வரப்புகளில் வெண்டைப் பயிரை சாகுபடி செய்து தினசரி வருமானம் பெறலாம் என கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாஞ்சியூர் கிராம கமிட்டி தலைவர் பூபேஷ் செய்திருந்தார். விரைவில் சீரமைக்க கோரிக்கை வேளாண் அலுவலர் செயல்விளக்கம் இலகுரக வாகனங்கள் வேகமாக வரும்போது பள்ளத்தில் வாகனத்தில் ஏறி இறங்குவதால் மழைநீர் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களை சகதி கலந்த நீரில் குளிப்பாட்டுகிறது.

Tags : Garden Crops ,
× RELATED தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு: 6...