நாகை, அக்.31: நாகூர் அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர். நாகூர் அருகே வடகுடி சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி திலகவதி (43). இவர் கடந்த 25ம் தேதி திருவாரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்றுமுன்தினம் நாகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து திலகவதி கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் எஸ்பி ராஜசேகரன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி (பயிற்சி) அர்ச்சனா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் திலகவதியின் வீட்டின் எதிர்புறம் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.