×

குளத்தில் தவறி விழுந்து ஒருவயது குழந்தை பலி

நாகை, அக்.31:நாகூர் அருகே பாலக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகள் சாய்(1). இவர் கடந்த 28ம் தேதி வீட்டின் முன்புறம் உள்ள வாசலில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த தாமரைகுளத்தில் தவறி விழுந்தாள். உடனே சாய்யை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தாள். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Baby ,
× RELATED மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு