×

நாகையில் மதுவிலக்கு தனிப்படை சோதனையில் 21 பெண்கள் உள்பட 125 பேர் கைது

நாகை, அக்.31: நாகையில் மதுவிலக்கு சிறப்பு படை நடத்திய சோதனையில் 21 பெண்கள் உள்ளிட்ட 125 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில் 15 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, 8 இன்ஸ்பெக்டர்கள், 7 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 78 போலீசார், 7 ரோமியோ டீம் இணைந்து நாகை மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 125 ஆண்கள், 21 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 15 ஆயிரத்து 210 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 3,366 மதுபான பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மது கடத்தலுக்கு பயன்படுத்திய 5 நான்கு சக்கர வாகனம், 17 இரண்டு சக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை: அதேபோல் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி பகுதியில் மதுவிலக்குத் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தலைமையில் போலீசார் வாகனசோதனை நடத்தினர். அப்போது டாடாசுமோ கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் மறித்தும் கார் நிற்காமல் சென்றது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை பின் தொடர்ந்தனர். மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் சாலையில் திருநின்றவூர் என்ற இடத்தில் உள்ளே செல்லும் சாலையில் கார் சென்றது.

Tags :
× RELATED கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை