×

தொண்டி பகுதியில் களை கட்டியது தீபாவளி வியாபாரம்

தொண்டி,  அக். 27: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக  வியாபாரம் சூடுபிடிக்காமல் மந்த நிலையில் இருந்தது. கடைசி நாளான நேற்று  கிராம மக்கள் அதிகமாக வந்ததால் வியாபாரம் களைகட்டியது. தீபாவளி  பண்டிகை என்றாலே கிராமம் முதல் நகரம் வரையிலும் அனைத்து தரப்பு மக்களும்  மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததால்  விவசாயிகள் இம்முறை அதிகம் விருப்பம் இல்லாமமல் இருந்தனர். இதனால் ஜவுளி கடை  முதல் மளிகை கடை வரையிலும் வியாபாரம் மந்தமாக இருந்தது.

மேலும் தற்போது  விவசாய பணிகளும் நடைபெற்று வருவதால் கூடுதல் செலவு செய்ய யோசித்து வந்தனர்.  இந்நிலையில் கடைசி நாளான நேற்று தொண்டி முழுவதும் மக்கள் கூட்டம் அலை  மோதியது, இதனால் அனைத்து கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது. இதனால் வியாபாரிகள்  மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து இப்பகுதி  மக்கள் கூறியதாவது, எப்படியும் தீபாவளி பண்டிகையை கொண்டாடியே தீர வேண்டும்.  குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடன் பட்டாவது ஜவுளி எடுக்க வேண்டும்.  அதனால் கடைசி நாள் வரையிலும் காத்திருந்தோம் என்றனர்.

Tags : weed building ,area ,Thondi ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது