×

தென்னிந்திய ரோல்பால் ஸ்கேட்டிங் திண்டுக்கல் மாணவி தங்கம் வென்றார்

திண்டுக்கல், அக். 27: பெங்களூரில் தென்னிந்திய அளவில் நடந்த ரோல்பால் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி முதலிடமும், கேரள அணி இரண்டாமிடமும், கர்நாடகா மூன்றாமிடமும் பெற்றது.

தமிழக அணியில் திண்டுக்கல்லை சேர்ந்த எஸ்எம்பிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி விதுலா தங்கப்பதக்கம் பெற்றார். சாதனை படைத்த விதுலா, பயிற்சியாளர் பிரேம்நாத் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

விபத்து, ஒலி, மாசில்லா தீபாவளி கொண்டாடுங்கள்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

திண்டுக்கல், அக். 27: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு தீபாவளிப்பண்டிகையன்றும், கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதில் ஒன்றான பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை: 1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 2. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:
1. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.
2. மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

Tags : South Indian ,rollerball skater ,student ,Dindigul ,
× RELATED முகநூலில் மாணவி படம் வெளியிட்டு அவதூறு வாலிபர் கைது