×

தீபாவளி பர்சேஸ் ஒன் ஸ்டாப் சென்டருக்கு செக்யூரிட்டி தேவை

திண்டுக்கல், அக். 27: திண்டுக்கல் மாவட்டத்தில், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறுகிய காலம் தங்கி செல்ல வசதியாகவும், பாதுகாப்புடன் தங்குவதற்காக (ஒன் ஸ்டாப் சென்டர்) சகி என்ற குறுகிய கால தங்கும் இல்லம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இல்லத்தில் அரசு அனுமதித்துள்ள பதவியில் செக்யூரிட்டி கார்டு, டிரைவர் பணிக்கு தொகுப்பூதியத்தில் ஒரு பணியிடத்திற்கு பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளது. மாத சம்பளம் ரூ.10,000 ஆகும். இந்த பணிக்கு 8ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக பணி அனுபவம் இருக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண் 88ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு வரும் நவ.6ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்: 0451-2460092ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Diwali Purchase One Stop Center ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்