×

பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் முத்துப்பேட்டை பள்ளியமேட்டில் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்

முத்துப்பேட்டை, அக். 27: முத்துப்பேட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளியமேடு கிராம மக்களுக்கு சேவை அமைப்பினர் வேட்டி, சேலை, சிறுவர்களுக்கு ஆடைகள், ஸ்வீட், பட்டாசுகளை வழங்கினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பள்ளியமேடு கிராமத்தில் கடந்தாண்டு கஜா புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சேவை அமைப்பு சார்பில் இந்த கிராமத்தை தேர்வு செய்து அப்பகுதி மக்களுக்கு தீபாவளியை கொண்டாடும் வகையில் வேட்டி, சேலை, சிறுவர்களுக்கு ஆடைகள், ஸ்வீட், பட்டாசுகள் வழங்கப்பட்டது.

இதனை ரோட்டரி சங்க தலைவர் சிதம்பர சபாபதி வழங்கினார். இதில் திமுக பிரமுகர் ஜாம்பை கல்யாணம், அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் கோவி ரெங்கசாமி, பொருளாளர் குமரேசன், இயற்கை ஆர்வலர் ஜாம்பை வெங்கட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : PR Pandiyan ,Gaja Storm ,
× RELATED கஜா புயலின் போது மக்கள் எதிர்பால்...