×

நீடாமங்கலம் ஆதனூரில் மரக்கன்றுகள் நட்டு பசுமை தீபாவளி கொண்டாட்டம்

நீடாமங்கலம், அக். 27: நீடாமங்கலம் அருகில் ஆதனூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டு பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கீரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அமிர்தபுரி புண்ணிய வேதாந்த தோட்டம் இணைந்து பசுமை தீபாவளி விழாவிற்கு கரீன் நீடா அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமை வகித்தார். நீடாமங்கலம் நகர அமைப்பாளர் ஜானகிராமன், மன்னார்குடிபசுமை கரங்கள் தலைவர் கைலாசம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் உதயகுமார் வரவேற்றார்.

மரக்கன்றுகளை நட்டு திரைப்பட நடிகர் விஷ்ணுபிரியன் பேசுகையில் மாதா, பிதா, குரு தெய்வம் வரிசையில் தெய்வம் என்பது ஆதி தமிழர்களுக்கு இயற்க்கையே. மரம் செடி,கொடிகள் நமக்கு இயற்கையோடான தொப்புள் கொடி உறவு. பரமார்த்த குருகதைகளில் வருவது போல நுனி மரத்திலிருந்து அடி மரத்தை வெட்டுகிற இயற்கையை அழிக்கிற அறிவை எப்படியோ பெற்று விட்டோம்.‘ஆகவே தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதின் உச்ச தினமான தீபாவளி அன்று இயற்கையை காக்கும் தெய்வங்களான மரங்களை நடுகிறோம். மரக்கன்றுகள் நடும் அமைப்புகளை கண்டறிந்து அரசு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவேண்டும் என்றார். பெண்குழந்தைகளுக்கு சந்தன கன்றுகளை திரைப்பட தயாரிப்பாளர் ராஜசேகர் வாங்கினார். பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானேர் கலந்து கொண்டனர். இணை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

Tags : Green Diwali Celebration ,
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...