×

திருவாரூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2வது நாள் ேபாராட்டம்

திருவாரூர், அக். 27: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி நேற்றும் 2வது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்திட வேண்டும். கிராம சேவை செய்த மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் மாநிலம் தழுவிய அளவில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நேற்றும் 2வது நாளாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags : Government doctors ,district ,Thiruvarur ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது