×

புகை, மது பழக்கம் கூடாது கல்வி அதிகாரி பேச்சால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

காரைக்கால், அக்.27: புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா காரைக்கால் வர்த்தக சபை அரங்கில் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு `அன்புள்ளஆசிரியருக்கு’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், ஆசிரியர்களுக்கு விரைவில் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். மேலும், இந்த கல்வி ஆண்டியில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் அசனா, கீதாஆனந்தன், பள்ளி கல்வி துணை இயக்குநர் கோவிந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அல்லி வாழ்த்துரை வழங்கி பேசுகையில், ஆசிரியர்கள் புகைப்பிடிக்க கூடாது. மது அருந்தக் கூடாது என்று அறிவுறுத்தினார். இயல்பாகவே ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிப்போம். அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக முதன்மை கல்வி அலுவலர் பேசியது, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Teachers ,education official ,speech ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்