×

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

அரியலூர், அக்.27: அரியலூர் மாவட்டம் திருமானூரில், காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை அரியலூர் டிஎஸ்பி.,திருமேனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமானூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி அரியலூர் சாலையில் முடிகொண்டான் வரை சென்று மீண்டும் திருமானூர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்து. பேரணியில் காவல்துறையினர், இளைஞர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வேளாண் அதிகாரி தகவல் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி