×

கருத்துகேட்பு கூட்டத்தில் சிமெண்ட் ஆலை சுரங்க விரிவாக்கப்பணிக்கு எதிர்ப்பு

அரியலூர், அக்.27: அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கம் தொடர்பாக நடைபெற்ற பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இதில் 110 ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக சுரங்கம் விரிவாக்கம் செய்யும் பணிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுரங்கம் வெட்டியெடுக்க 13 ஆண்டுகளுக்கு அனுமதி வேண்டி கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இங்கு சுரங்கம் வெட்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், நிலம் கொடுத்தவா–்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், அருகில் குருங்காடு உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், ஆனந்தாவாடி கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் அதிகளவில் செய்து வருகின்றனர். அவையனைத்தும் நிலத்தடி நீர் இன்றி மானாவாரி நிலமாகிவிடும், இங்குள்ள கிராம சாலை குறுகியதாக உள்ளதால் நிமிடத்திற்கு 47 லாரிகள் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் நடந்து செல்பவர்கள் ஒதுங்க கூட இடம் இல்லை, அப்பகுதி மாணவர்கள் பயில இலவச பேருந்து வசதி செய்ய வேண்டும், வேலை தருவதாக உறுதியளித்த நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர்.

மேலும் சமூக ஆர்வலர்கள் பேசுகையில் அரசு சிமென்ட் ஆலை 40 ஆண்டுகளாக வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்கள் இதுவரை மூடப்படவில்லை. அவற்றை மூட வேண்டும், அல்லது நீர்நிலைகலாக மாற்ற வேண்டும், குறைந்த ஆழம் கொண்ட சுரங்கங்களை மேய்ச்சல் நிலமாக மாற்றி வேண்டும், போதிய பசுமை காடுகளை ஏற்படுத்த வேண்டும். சாலைகளை விரிவுபடுத்தி கனரக வாகனங்கள் செல்லும் விதத்தில் தரமான சாலைகளை அமைத்த பின் சுரங்க விரிவாக்கத்திற்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : referendum ,
× RELATED நாகர்கோவிலில் போலீஸ், துணை ராணுவம்...