பொன்னமராவதி அருகே இளம்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை

பொன்னமராவதி, அக்.27: பொன்னமராவதி அருகே இளம்பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணை செய்து வருகின்றார்.பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் மகன் பழனிவேலு(32). இவருக்கும் திருமயம் துளையானூர் வீரப்பன் மகள் கவிதா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 அரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிவேலு தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

கவிதாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கவிதா இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் பொன்னமராவதி போலீசில் கவிதாவின் தாய் அமராவதி புகார் செய்துள்ளார். மேலும் கவிதாவின் உறவினர்கள் பொன்னமராவதி காவல்நிலையத்தில் தங்கள் வீட்டுப்பிள்ளையை கொன்றுவிட்டதாக கூறி அழுது புழம்பினர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவின் பிரேதத்தை கைப்பற்றி வலையபட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆவதால் இலுப்பூர் ஆர்டிஓ, டெய்சிகுமார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மேலும் விசாரணை நடத்த இலுப்பூர் ஆர்டிஓ அலுலகத்திற்கு இருதரப்பினரையும் வருமாறு கூறியுள்ளார்.

Related Stories:

>