×

தீபாவளியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம், அக்.27: தீப திருநாளான தீபாவளி பண்டிகை இன்று (27ம்தேதி)  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் புனித நீராடிவிட்டு புத்தாடை அணிந்து கோயிலில் தரிசனம் செய்வதை மக்கள் காலம், காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதன்படி தீபாவளியையொட்டி சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. இதேபோல் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சிவன், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அதிகாலை பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. இதேபோல் சேலம் கோட்டை பெருமாள், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், பெருமாள், விநாயகர், முருகன் கோயில்களில் இன்று அலங்கார ஆராதனைகள் நடக்கிறது.

Tags : Temples ,Diwali ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு