பாப்பிரெட்டிப்பட்டியில் மாணவர் விடுதி முன்பு

குப்பையால் சுகாதார சீர்கேடுபாப்பிரெட்டிப்பட்டி, அக்.27: பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி அருகே அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது இந்த விடுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதி நுழைவாயில் அருகே குப்பைகள் கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏர்பட்டுள்ளது. மேலும், கடுமையான துர்நாற்றத்தை வீசி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாரளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகும் முன், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>