×

தூத்துக்குடி கலவரத்தை கட்டுப்படுத்த காவல் துறைக்கு புதிய வாகனம் எஸ்பி அருண் பாலகோபாலன் ஆய்வு

தூத்துக்குடி, அக். 27: தூத்துக்குடி மாவட்டத்தில் கலவரம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும்பொருட்டு காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள வருண் எனப்படும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் புதிய வாகனத்தை  எஸ்பி  அருண் பாலகோபாலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கலவரம் உள்ளிட்ட காலங்களில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தும்பொருட்டு காவல் துறைக்கு வருண் எனப்படும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்  புதிய கனரக வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய வாகனத்தை எஸ்.பி. அருண் பாலகோபாலன் பார்வையிட்டு, அதை சிறந்தமுறையில் பராமரிக்கும் பொருட்டு மோட்டார் வாகனப்பிரிவு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த வருண் வாகனத்தை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைப்பதற்கு பயன்படுத்தலாம், மேலும் தண்ணீரில் வண்ணச்சாயம் கலந்து கலவரத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து வண்ணத்தின் நிறத்தை வைத்து எதிரிகளை எளிதில் அடையாளம் காண இயலும். இந்த வாகனத்தில் 3 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. ஒன்று சாதாரண தண்ணீர் பீய்ச்சியடிப்பதற்கும், மற்றொன்று வண்ணச் சாயம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடிப்பதற்கும் ஏதுவாகவுள்ளது. இந்த தண்ணீர் தொட்டி 3600 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்’’ என்றார். ஆய்வின் போது ஆயுதப்படை டி.எஸ்.பி. மாரியப்பன், இன்ஸ்பெக்டர் மகேஷ் பத்மநாபன், காவல்துறை மோட்டார் வாகனப்பிரிவு எஸ்ஐ மயிலேறும் பெருமாள், தனிப்பிரிவு எஸ்ஐகள் கிறிஸ்டி மற்றும் உமையொருபாகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : SP ,Arun Balakopalan ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்