×

நாசரேத் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாசரேத், அக். 27: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு குழு சார்பாக ராகிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணைமுதல்வர் பெரியநாயகம்  ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சாமுவேல் தங்கராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். ராகிங் எதிர்ப்புகுழு பொறுப்பு பேராசிரியை பியூலா ஹேமலதா வரவேற்றார். மாணவர்கள் இயற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது. சாயர்புரம் போப் கல்லூரி பேராசிரியர் தினகரன்  கல்லூரிகளில் ராகிங் செய்தால் அதனுடைய விளைவுகள், தண்டனைகள் குறித்து எடுத்து கூறினார்.

புதுக்கோட்டை பிஎஸ்பி மேல்நிலைப்பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னுதுரை கல்வியின் நோக்கம், மாணவர்களுக்கிடையே இணக்கமான போக்கு ஒன்றுபட்ட உணர்வு போன்றவை இருக்கும் போது இந்த குறைகள் நேர்வதில்லை என்றும், பெற்றோர்கள் சமூகம் பொறுப்பெடுத்து மாணவர்களிடம் நல்ல உணர்வுகள் வளர பணியாற்ற வேண்டும் என்றும்,  கூறினார். இதில் பேராசிரியர்கள் அலுவலர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். ராகிங் எதிர்ப்பு குழு மாணவர் தலைவர் பிரான்சிஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் எஸ்.டி.கே ராஜன், முதல்வர் பொன்னுதுரை, பேராசிரியை பியூலா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Nazareth College ,
× RELATED மண்டல கால்பந்து போட்டி நாசரேத் பொறியியல் கல்லூரி சாதனை