×

தென்தமிழகத்தில் கல்வித்துறையில் சாதனை படைத்து வரும் வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மாணவச் செல்வங்களின் தரநிலைக்கு இணையாக கிராமப்புற மாணவர்களின் தரநிலையை உயர்த்தும் உன்னதமான எண்ணத்தைத் தன்னகத்தே கொண்டு தென் தமிழகத்தின் கல்வித்துறையில் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை தனதாக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் தன்னிகரற்ற தனித்துவமிக்க சிபிஎஸ்இ பள்ளி என்ற புகழுக்குரியது தான் நமது வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி. மாணவர்கள் எதிர்காலம் சிறக்க அனுபவமிக்க ஆசிரியப் பெருந்தகையையும் IIT மற்றும் NEET வகுப்புகளுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. IIT / NEET வகுப்பில் பங்கு பெறும் மாணவர்களுக்கு பருவம் தோறும் சிறப்பு முகாம்கள் (4 நாட்கள்) ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. போட்டித் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு மாதிரித் தேர்வுகள் ஒலிம்பிபாட், (AMTI தேர்வுகள்) நடத்தப்படுகின்றன.

மெல்ல மலரும் குழந்தைகளை, இனி அவ்வாறு அழைப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காக மாலை நேர சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புற நடைபெற்று வருகிறது. மாணவக் கண்மணிகளின் தனித் திறன்களை வெளிக் கொணரும் வகையில், பல்வேறு போட்டிகள் பள்ளியிலேயே நடத்தப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. திறன்மிகு மாணவர்களை வெளியுலகுக்கு அடையாளப்படுத்தும் நோக்கில் இவை நடத்தப்படுகின்றன. பாடங்களை எளிதில் மனதில் பதியச் செய்யும் நோக்கோடு களப்பயணம் முறையிலும், கல்வி, கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பாடத் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், பல்துறை சார்ந்த நூல்களடங்கிய நூலகம், மொழிப்பாடத்திற்கான ஆய்வகம், கணித ஆய்வகம் இவையனைத்தும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கல்வி சிறப்புறக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.  கல்வி மட்டுமில்லாது விளையாட்டுத் துறைகளிலும் மாணவச் செல்வங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி ஏதுவென்றால் அது நம் வேல்ஸ் வித்யாலயா தான். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை மாணவச் செல்வங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தேனி, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று மாநில அளவிலான போட்டிகளில் நமது மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிலம்பம், டேக்வாண்டோ, ஸ்கேட்டிங் செஸ், கீபோர்டு, கித்தார், வெஸ்டர்ன் டான்ஸ், பரதம், ட்ரம்ஸ் போன்ற கல்விசாரா செயல்பாடுகளும் திறன் மிகுந்த ஆசிரியர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பருவ முடிவிலும் சிறப்பு வகுப்புகள் (ஒரு வாரம்) ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களின் தரநிலை சோதித்தறியப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Wales Vidyalaya CBSE ,School of Education ,South Tamil Nadu ,
× RELATED தென் தமிழகம், வட தமிழக மேற்கு...