×

வி.கே.புரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

வி.கே.புரம், அக்.27: தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆங்காங்கே பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகள் நிலவேம்பு கசாயத்தை வழங்கி வருகிறார்கள்.இந்நிலையில் நேற்று வி.கே.புரத்தில் சமூக ஆர்வலர்கள் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் வாங்கி பயன் பெற்றனர்.

இதில் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சமூக ஆர்வலர்கள் மருத்துவர் மைக்கேல் செபராஜ், ஷேக்அலி, மூர்த்தி மற்றும் ஜமாத் தலைவர் அபுல்கலாம் ஆசாத், ஆசிரியர் மைதீன்பிச்சை, காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.   

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே பெண் மாயம்