×

சினிமாவுக்கு சென்று திரும்பியபோது அரசு மருத்துவமனை ஊழியர் விபத்தில் சிக்கி பரிதாப சாவு

புதுச்சேரி,  அக். 27: புதுவையில் சினிமாவுக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய  அரசு மருத்துவமனை ஊழியர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். புதுவை,  முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜா  (26). அரசு பொது மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி  அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் படத்துக்கு  சென்றுவிட்டு பைக்கில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு  10.30 மணியளவில் அவர், லாஸ்பேட்டை, இசிஆர் சாலை, சிவாஜி சிலை அருகே  அதிவேகமாக வந்து அவர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

இதில்  வண்டியிலிருந்து சறுக்கி கீழே விழுந்த ராஜா, சாலையோரம் இருந்த தடுப்புக்  கட்டையில் மோதி விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை  அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலே அவர் இறந்துவிட்டதாக  கூறிவிட்டனர். இதுகுறித்து புதுச்சேரி வடக்கு டிராபிக் போலீசார்  வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் போடாமல் ராஜா  சென்றதால் விபத்தில் பலியாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனார். திருமணமாகாத  ராஜாவுக்கு விரைவில் அவரது வீட்டார் திருமண ஏற்பாடுகள் செய்ய  திட்டமிட்டிருந்ததால் அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.

Tags : Government hospital employee crashes ,
× RELATED சினிமா படப்பிடிப்புக்கு தற்போது...