×

சொந்த ஊர் நோக்கி மக்கள் படையெடுத்ததால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

விக்கிரவாண்டி, அக். 27: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். வெளியூரில் தங்கி வேலை செய்யும் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தலைநகரமான சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் தங்கி வேலை செய்து வருவதால் திருவிழா காலங்களில் தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்று வருகின்றனர்.
இன்று தீபாவளி பண்டிகை என்பதால் பெரும்பாலானோர் கார்கள், வேன்கள், சிறப்பு பஸ்கள் என பல்வேறு வாகனங்களில் சென்றனர். இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தென் மாவட்டம் நோக்கி அதிகளவில் வாகனங்கள் சென்றன.

தீபாவளிக்கு முன் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் கிராமத்தை நோக்கிச் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பிரிவு சாலை பகுதியில் சாலையை கடப்பதற்கே வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு வரை விக்கிரவாண்டி டோல்கேட் வழியாக சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : hometown ,
× RELATED திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து...